--- --:--:-- --

இபிஎஸ் திடீர் ஆலோசனை.. கூட்டணி கூட்டணியில் முக்கிய முடிவு..!

7

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

 

குறிப்பாக தேமுதிக கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக சேலம் மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம், அதிமுக பகுதி செயலாளர் மற்றும் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

Right Menu Icon