முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட்.. மக்கள் அவதி..!
நெல்லை தியாகராஜ நகரில் உள்ள ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் 26 கோடி ரூபாய் செலவில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்த ரயில்வே மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டு நேற்று மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதன் கீழுள்ள ரயில்வே கேட் முன் அறிவிப்பின்றி திடீரென அடைக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர். பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






