--- --:--:-- --

தனது பிறந்த நாளிலேயே மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை வைத்த நடிகர்..!

7

னது பிறந்த நாளிலேயே மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடிகர் யோகிபாபு நடத்தியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது அஜித்தின் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் இன்னும் பல படங்களில் ஹீரோவாகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இவர் முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் தனது 36வது பிறந்த நாளை சமீபத்தில் நடிகர் யோகிபாபு கொண்டாடினார்.

 

அதே நிகழ்வில் தனது மகளின் பெயர் சூட்டு விழாவையும் அவர் நடத்தி முடித்துள்ளார். தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு விசாகன் என பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon