--- --:--:-- --

திமுக கொடுத்துள்ள 25 இடங்கள் ஏற்கத்தக்கது அல்ல – கிரிஷ் சோடங்கர்

7

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதிலும், ஆட்சியில் பங்கு, தவெக ஆதரவு கருத்து என தொடர்ந்து பரபரப்புக்கு இடமில்லாமல் பேசிவரும் காங்கிரஸுடன் நேற்று திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது.

 

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், நேற்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் சுமார் 1 மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், இன்று காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவர், “திமுக கொடுத்துள்ள 25 இடங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. புதிய கட்சியான தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸின் பலத்தையும், ராகுலையும் தவெக அங்கீகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; “காங்கிரஸ் – திமுக இடையே நேற்று ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, ​​எங்கள் முன்னுரிமை சட்டமன்றத் தேர்தல். இதன் மூலம் கிடைக்கும் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில், ராஜ்யசபாவில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க முடியும். திமுக எங்களுக்கு 25 இடங்களை வழங்கியுள்ளது.

 

ஆனால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” எனத் தெரிவித்தார். தொடர்ந்து தவெக குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிஷ் சோடங்கர், “இது ஒரு புதிய கட்சி. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் இளைஞர்களிடையே ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தையும் எங்கள் தலைவர் ராகுலையும் அங்கீகரித்து வருகின்றனர்” என்றார்.

 

தொடர்ந்து தவெகவுடன் கூட்டணி அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இப்போது, ​​திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் நாங்கள் விரும்புவதை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Right Menu Icon