ரஷ்யாவுக்கு மாத்திரைகளை அனுப்பும் இந்தியா! நன்றி சொன்ன அதிபர்
கொரொனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே ரஷ்யாவுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை அனுப்பும் இந்திய அரசுக்கு ரஷ்ய அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகளை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி ரஷ்யாவுக்கு அடுத்த வாரத்திற்குள் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசின் முடிவுக்கு ரஷ்ய அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் முடிவு கொரொனாவைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் . இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் தைவானை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் டிசம்பர் மாதத்திலேயே கொரொனா வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவக் கூடியது என்று மின்னஞ்சல் அனுப்பியதை உலக சுகாதார அமைப்பு பொருட்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குளறுபடியான தகவல்களை அளித்ததாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலக நாடுகளில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய போதிலும் முக்கிய முடிவுகள் எடுக்க காலம் தாழ்த்தியதற்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







