--- --:--:-- --

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு! 15 பேர் உயிரிழப்பு

blast thailand

தாய்லாந்தின் தெற்கு பகுதியில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

 

தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ளது, யாலா மாகாணம். இங்கு, தன்னார்வலர்கள் பராமரித்து வரும் இரண்டு சோதனைச்சாவடி வழியாக சில வாகனங்கள் செல்ல முயன்றுள்ளன. அந்த வாகனங்களை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டது.

 

இதில் வாக்குவாதம் முற்றியதும், வாகனங்களில் வந்தவர்கள், சோதனைச்சாவடியில் இருந்தவர்கள், தடுக்க வந்த கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon