--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவை மீறி கோவையின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக இயங்கும் ஜவுளி கடைகள்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?

1

கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு 3 வது முறையாக வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள்,ஏ.சி வசதி இல்லா சிறிய ஜவுளி கடைகள் மட்டும் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

 

மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் கோவையின் முக்கிய பகுதியான டவுன் ஹாலில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளி கடைகளின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள சிறிய வாசல் வழியாக வியாபாரம் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளான ஒப்பணக்கார வீதி,காந்திபுரம்,கிராஸ்கட் சாலை மற்றும் பீளமேடு மசக்காளி பாளையத்தில் உள்ள சில்க்ஸ் சாரி விற்பனையகம் போன்ற கடைகளில் வாடிக்கையாளர்களை உள்ளே அமர வைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அதனை சாதகமாக்கி கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இது போன்ற பெரிய ஜவுளிகடைகளில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு மறைமுகமாக நடைபெறும் இதுபோன்ற விற்பனையால் பச்சை மண்டலத்தில் இருந்து நோக்கி கோவை மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறும் அபாய நிலை உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon