மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து..!
மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இன்று மெயின் ரோடு வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பைக் திடீரென சாலையில் நின்றதால் அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார்.
அப்பொழுது பின்னல் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்தும் அதன் பின்னால் வந்த திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து ஒன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் ஓட்டுநர்களும் பயணிகளும் காயமின்றி நல்வாய்ப்பாக தப்பினர். இதில் தனியார் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது.





