நேபாளத்தில் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +977 98086 02881 மற்றும் +98103 26134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




