கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழை காரணமாக 1-5ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொடைக்கானலில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






