ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படும் என தமிழக அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணிக்காக காத்திருப்போரிடம் மேலும் ஒரு தேர்வு என்றால் தான் பணி எனக் கூறுவது இளைஞர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு மோசடி செய்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தாமரைக் குளம் வடிவேல் நாயக்கன்பட்டி பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவாய்த்துறை உதவியோடு பட்டா பெற்று பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக 18 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





