--- --:--:-- --

தன்னை ஜோக்கராக எல்லாரும் நினைப்பதாக எண்ணி ஆசிரியை தற்கொலை..!

7

சென்னை ஆவடி அருகே தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செக்காடு என்ற பகுதியை சேர்ந்த பாலாஜி 7 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரியை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர் .

 

கடந்த 25ஆம் தேதி தனது எட்டு மாத குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய புவனேஸ்வரி கோவிந்தன் தாங்கல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் அழைத்து சென்று 8 மாத குழந்தையை போலீசார் ஏரியில் தேடி வருகின்றனர்.

 

இதனிடையே கணவன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தன்னை ஜோக்கராக பார்ப்பதாலும் உடல் வலி தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக புவனேஸ்வரி எழுதிவைத்த குறிப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கணவர் பாலாஜி மாமியார் மீது நடவடிக்கை எடுக்க புவனேஸ்வரியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon