ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு..!
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி உழல் தொடர்பான வழக்கில் திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜீவன் கிருஷ்ணா சாகாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வரும் நிலையில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான ஜீவன் கிருஷ்ணா சாகாவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவையும் சிபிஐ அமைத்துள்ளது.





