--- --:--:-- --

இன்று இரவு முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்..!

2

தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என கலால் துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார். வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் 6ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகள், மதுபான விடுதிகள், கிணறுகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

 

ஏழாம் தேதி காலையில் கலால் துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சீல் பிரிக்கப்படும் எனவும் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கலால் துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon