--- --:--:-- --

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

10

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும்19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை, காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி உட்பட்ட பகுதிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பேரூராட்சி காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், நகராட்சி கும்மிடிப்பூண்டி பகுதி, பொன்னேரி, மீஞ்சூர், பேரூராட்சிகள், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஒன்றியங்களின் அனைத்து ஊராட்சிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon