இளைஞர் ஒருவரின் விலாவில் குத்தி மறுபுறம் வந்த கம்பி..! 6 மணி நேரம் போராடி மீட்ட மருத்துவர்கள்!
Close up surgical operation using laparoscopic equipment in modern clinic.
தஞ்சையில் இளைஞர் ஒருவரது உடலின் ஒரு புறம் குத்தி மறுபுறம் வந்த ஒரு கம்பியை 6 மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
ஒரத்தநாட்டை அடுத்த பின்னையூரில் அரசுப் பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. அதே பகுதியை சேர்ந்த 25 வயதான அய்யப்பன் என்ற இளைஞர் செல்போன் பேசியபடி வந்து அங்க தோண்டப்பட்ட பள்ளம் ஒன்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
பள்ளத்தில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு உருட்டு கம்பி ஒன்று ஐயப்பனின் விலா எலும்பு பகுதியில் ஒரு புறத்தில் குத்தி மறுபுறமாக வந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐயப்பனுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஐய்யப்பன் உடல் நலம் தேறிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






