--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டேங்கர் லாரி..!

5

ர்நாடகாவில் நிலச்சரிவு மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாமக்கலை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இருவரின் நிலை குறித்து தெரியாததால் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

கர்நாடகா மாநிலம் உத்தர கனடா மாவட்டத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக மங்களூர் அங்கு ஒரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

விளைச்சலில் நாமக்கலைச் சேர்ந்த சமையல் எரிவாய் டேங்கர் லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மேலும் இரண்டு டேங்கர் லாரிகள் புதைந்தனர். சின்னையா என்கிற சின்னப்பன் சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு டேங்கர் லாரி ஓட்டுனர்களும் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில் உள்ளன.

 

இதனால் அவர்களது நிலை என்னவென்று தெரியாததால் ஓட்டுநர்களின் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தேநீர் கடை மற்றும் ஒரு வீடு மண்ணில் புதைந்தன. தேநீர் கடை அருகே நடத்தப்பட்ட லாரிகளும் சிக்கிக்கொண்டன.

 

9 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மணலில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon