விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் ரஞ்சித்..!
திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் ரஞ்சித்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி – சித்ரா தம்பதி. இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது அவரது எதிர்பாரத விதமாக மயங்கி விழுந்தார். இதனால் இருவரும் விபத்தில் சிக்கினார்.
அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த நடிகர் ரஞ்சித் கீழே விழுந்த தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.





