மது போதையில் மோதிக்கொண்ட தமிழ் – வடமாநில இருதரப்பு இளைஞர்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது போதையில் இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. சேகரன் பாளையத்தில் உள்ள பழைய பொருட்கள் பிரித்தெடுக்கும் குடோனில் 25க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்கனவே மதுபோதையில்இருந்த வடமாநில இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் இரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் கமலசங்கர் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







