அரசியல் ஆதாயத்தை விட மாணவர்கள் முக்கியம்: பிரதான்
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்தை விட, தமிழக மாணவர்களின் நலன்களில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
NEP தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரின் பதிவை மேற்கோள் காட்டி தர்மேந்திர பிரதான் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.





