youtuber இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு..!
youtuber இர்பானின் மனைவி கர்ப்பமடைந்துள்ளார். சமீபத்தில் தான் இவருடைய மனைவியின் வளைகாப்பு நடைபெற்றது. மேலும் இர்ஃபான் தன்னுடைய மனைவி வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாக கூறி இருந்தார்.
இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை உள்ளதால் தனது மனைவியை இர்பான் துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள பிரபல மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியில் பிக் பாஸ் மாயா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்கப் போவது பெண் குழந்தை தான் என்பதை மகிழ்ச்சியுடன் இருப்பான் என்பதை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் சிலர் பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து youtuber பகிரங்கப்படுத்திய அவரது செயலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





