--- --:--:-- --

விரும்பும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவிப்பு..!

11

மிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெற்றோர் சம்மதத்துடன் விரும்பும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

அதில் ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதல் மாணவர்கள் இருந்தால் தொகுப்பு வாரியாக பிரித்து பாடம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.

 

விருப்பப்படும் மாணவர்களை இணையவெளி அல்லது தொலைதூர கற்றல் முறையில் வீட்டில் இருந்து பள்ளியில் படிக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

தனியார் பள்ளி நிர்வாகங்கள், எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகம் கைப்பிடிகள், கதவுகள் உள்ளிட்டவை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படவேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon