பிரம்மாண்ட மாநாடு நடத்த தமிழக பாஜக முடிவு?
அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவ.23ல் தமிழகம் திரும்புகிறார். அவர் வந்தவுடன் கட்சியில் பெருமளவு மாற்றம் இருக்குமெனக் கூறப்படுகிறது.
அந்தவகையில், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது தீவிரமாக நடக்கிறது. தொடர்ந்து, கோவையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி, அரசியல் களத்தில் கட்சியை உயிரோட்டம் மிக்கதாக ஆக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






