தமிழக சட்டப்பேரவை தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும்..!
தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கொரொனாவுக்கு மத்தியில் பீகார் தேர்தல் பணிகளை தொடங்கிய போது இது மடத்தனம் என சிலர் நினைத்தனர்.
ஆனால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்றார். தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை.
அந்த விஷயத்தில் தாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம் என்று கூறிய சுனில் அரோரா தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு சரியான நேரத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.






