--- --:--:-- --

7.5 % உள்ஒதுக்கீட்டில் இன்று சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர்..!

1

ரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் இன்று 250 பேர் வரை பங்கேற்க உள்ளனர். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கொரொனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியுள்ளது.

 

தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த 972 பேரில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த வகையில் 405 பேருக்கு நேரடியாக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்படி தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 270 மாணாக்கர்களில் 262 பேர் பங்கேற்றுள்ளனர்.

 

இவர்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு நேரடியாக அரசு மருத்துவ கல்லூரிக்கு 224 பேருக்கும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 4 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது .இரண்டாம் நாளான இன்று சுமார் 250 பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Right Menu Icon