ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
ஊஞ்சல் கட்டி ஆடியபோது கயிறு கழுத்தை இறுக்கியதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சாந்தி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களின் 7 வயது மகனான கீர்த்தி நாதன் வீட்டு ஜன்னலில் துணி காயப்போடும் கயிற்றில் ஊஞ்சல் கட்டி அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.





