--- --:--:-- --

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்..! கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன்..!

13

டத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார் .

 

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் செல்விக்கு ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய எழில் செல்வி உளுந்தூர்பேட்டையில் அவருடன் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

 

செல்வி நடத்தையில் சந்தேகமடைந்த ஐயப்பன் தொடர்ந்து அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை ஏற்பட்ட சண்டையில் ஐயப்பன் எழில் செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

 

இதில் மயங்கி விழுந்த செல்வியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஐயப்பன் சேர்த்து வைத்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். துரோகம் செய்து விட்டு வேறு ஒருவருடன் பேசி வந்ததால் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஐயப்பன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon