--- --:--:-- --

சூர்யாதேவியை கைது செய்ய வேண்டும்..!

3

டிக் டாக் பிரபலம் சூரியதேவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க ரவுடிபேபி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையை சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர்.

 

கடந்த 3ஆம் நாள் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி அவரை செருப்பால் தாக்கியதை வீடியோவாக பதிவு செய்து வீடியோ வெளியிட்ட எடுத்துவெளியிட்டார்.

 

கொலை மிரட்டல் புகாரின் பேரில் மதுரை காவல்துறையினர் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தற்கொலை செய்யப் போவதாக கூறி மதுரை மாநகர காவல் ஆணையருக்கு சூர்யா தேவி வீடியோ ஒன்றை அனுப்பினார்.

 

ஆனால் தூக்கு கயிறை தொங்க விட்டு கட்டிலில் சொகுசாக படுத்துறங்கிய அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சூர்யா தேவியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிக்கந்தர் மற்றும் அவரது தோழியான ரவுடி பேபி சூர்யா ஆகியோர் காவல்ஆய்வாளரை சந்தித்து கோரிக்கை அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon