எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை பெரிதாக்க வேண்டாம்..!
Neeraj Chopra, Indian track and field athlete competes in Javelin throw, in New Delhi on 14/5/2018 The Week photo by Arvind Jain
எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து எனது பெயரை சர்ச்சையில் இழுக்க வேண்டாம் என ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டியை பயன்படுத்தியது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதியப்பட்டன.
இந்திய வீரரின் கவனத்தை திசை திருப்பவே அவர் உள்நோக்கத்துடன் இவ்வாறு நடந்து இருக்கலாம் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் இது தொடர்பாக நீரஜ் சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் தனது ஈட்டியை பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை. அதை பெரிதாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.







