--- --:--:-- --

தமிழகத்தில் பிரபல கார் திருடன் சுரேஷ் கைது..!

3

தமிழகத்தையே கலக்கி வந்த பிரபல கார் திருடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டான். அவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் – பழனி புறவழிச்சாலையில் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அவ்வழியே காரில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து இருக்கிறார்கள். இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் ஒருவர் குளித்தலையை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிரபல நான்கு சக்கர வாகனங்கள் திருடன் என்றும், கார், லாரி, இருசக்கர வாகன திருட்டு, போலி மதுபானம் மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் என பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. மற்றொருவன் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் என்றும் சுரேஷின் கூட்டாளி எனவும் தெரியவந்தது.

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு டேங்கர் லாரிகள், 2 டிப்பர் லாரிகள், ஒரு லாரி, 2 டெம்போ, ட்ராவலர் இரண்டு பொலிரோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ஆகும்.

Leave a Reply

Right Menu Icon