--- --:--:-- --

கொரொனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மீறியதாக சுரேஷ் ரெய்னா மீது வழக்குப்பதிவு..!

2

கொரொனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

கொரொனா பரவலை கட்டுபடுத்த மீண்டும் இரவு நேர முழு ஊரடங்கு ஐந்தாம் தேதி வரை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் மும்பை விமான நிலையம் அருகேயுள்ள டிராகன் பிளை பப் நேற்று இரவு செயல்பட்டதாக கூறப்படுகிறது.

 

அப்போது அங்கு சோதனை நடத்தி சுரேஷ் ரெய்னா, ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் உள்ளிட்ட 34 பேர் மீது கொரொனா ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon