அமெரிக்காவின் மிக உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவிப்பு..!
அமெரிக்காவின் மிக உயரிய விருதான லீஜின் ஆஃப் மெரிட் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்சித் சிங் பிரதமர் மோடி சார்பில் இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபட்டிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.







