--- --:--:-- --

சுருக்குமடி வலை விவகாரம் – மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..!

7

சுருக்கு மடி வலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. சுருக்கு மடி வலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

 

இந்த வழக்கு விசாரணையின் பொழுது சுருக்குமடி வலைகளை அனுமதித்தால் மீன்கள் மற்றும் அபூர்வ கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

எனவே சுருக்கு மடி வலையை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

 

Right Menu Icon