ஜேஇஇ நுழைவுத் தேர்வு இன்று தொடக்கம்..!
பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர JEE நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் கட்ட JEE மெயின் தேர்வு இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இரண்டாம் கட்ட JEE நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.





