--- --:--:-- --

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!

11

வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கு மக்களிடம் அதிக மவுசு உள்ளது. இன்ஸ்டா பக்கங்களில் பாலோவர்களை பார்த்தால் கூட வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களின் பாலோவர்கள் உள்ளனர். ஒரு சீரியல் நடிகை பெயர் சொன்னால் போதும் உடன அவர் இதுவரை என்னென்ன சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் பங்கேற்றுள்ளனர் என மொத்த விவரத்தையும் கூறிவிடுவார்கள்.

 

 

தற்போது ஒரு சின்னத்திரை நடிகையின் நிச்சயதார்த்த தகவல் தான் வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து பிரபலமானவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

 

 

தற்போது நடிகை ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது, அந்த நிகழ்ச்சிக்கு சீரியல் நடிகைகள் சைத்ரா ரெட்டி, கேப்ரியல்லா, நக்ஷத்ரா ஆகியோர் வந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon