எவரெஸ்ட் சிகரத்தில் கேட்கும் திடீர் மர்ம சத்தம்.. அச்சத்தில் மக்கள்..!
பனிப்பாறைகளில் விரிசல் ஏற்படுவதால் தான் எவரெஸ்ட் சிகரத்தில் இரவில் பயங்கர சத்தம் கேட்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இரவு நேரத்தில் மிகவும் பயங்கரமான சத்தங்கள் கேட்பதாக மலை ஏற்ற வீரர்கள் கூறி வருகின்றனர்.
எவரெஸ்ட் மலையில் இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு பயங்கர சத்தம் கேட்பதாக தெரிவித்தனர். இது குறித்து பனிப்பாறை குழுவினர் விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் பனிப்பாறையில் விரிசில் ஏற்படுவதால் தான் இரவில் பயங்கர சத்தம் கேட்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





