காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..!
நாடு முழுவதும் புதிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், NB.1.8.1 கொரோனா சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது.
இப்போது பருவகால காய்ச்சலும் அதிகரித்து வருவதால், எது கொரோனா, எது சாதாரண காய்ச்சல் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. இதனால், காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





