பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்..!
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய பள்ளியின் முதல்வர் மீது புதிய வழக்கு பதியப்பட்டு இருப்பதாக மாநகர துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் பயின்ற பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பெற்றோருக்கு தெரியாமல் மாணவிக்கு கவுன்சிலிங்க் கொடுக்க முயன்றது தொடர்புடைய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. புகார்களுக்கு உள்ளான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மற்றும் பிற அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.






