ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட புகார் தவறு எனக்கூறி போராட்டம் செய்யும் மாணவர்கள்..!
திருவள்ளூரில் பள்ளி மாணவியிடம் அத்து மீறியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நிச்சயம் ஆசிரியர் மீது தவறு இல்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஆசிரியர் இதுபோன்ற தவறை செய்திருக்க மாட்டார் எனக் கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.





