மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலை முயற்சி ..!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை ரயில் ஓட்டுநர் காப்பாற்றினார். சனிக்கிழமை மும்பையின் புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென அதன் முன் நின்றார்.
ரயிலுக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்டனர். ரயிலின் ஓட்டுநர் உடனடியாக அதனை நிறுத்தி காவலர் ஒருவர் ஓடிச் சென்று அந்த பெண்ணை மீட்டார்.





