சாலையில் நின்ற கல்லூரி பேருந்தை தள்ளிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்..!
கிருஷ்ணகிரி அருகே தனியார் கல்லூரி பேருந்து பழுதாகி விட ஆசிரியர்கள், மாணவர்கள் பேருந்தை தள்ளி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிட்டப்பள்ளி என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் பேருந்து காவேரிப்பட்டினம் என்ற பகுதியில் இருந்து கல்லூரிக்கு மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேருந்து பழுதாகி நின்றது.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் கீழே இறங்கி தள்ள விட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தை இயக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் நடுரோட்டில் வைத்து தள்ள வைத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.





