குழந்தைகளுக்காக பிரத்தியேக ரோபோ..!
ஜப்பானில் குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரத்தியேக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்களை உருட்டிக் கொண்டு குழந்தைகளைப் போலவே அழும் இந்த குழந்தைக்கு பிஆர்ஓ என்று பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளவர்களுக்கு அவரிடம் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக சிகிச்சையின் போது வலிப்பு மற்றும் இதயச் செயல் இழப்பு ஆபத்து குறித்தும் இந்த ரோபோ கண்டறிந்து வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை பயிற்சிபெறும் மருத்துவர்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம் என அதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழந்தை ரோபோவின் விலை இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





