--- --:--:-- --

பரோட்டா சாப்பிட்ட மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

5

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் விவி நகர் 5வது தெரு பகுதியை சேர்ந்தவர் அய்யம்குட்டி.

 

இவரது மகன் சிபி சக்கரவர்த்தி. 17வது வயதான இவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். புரோட்டா சாப்பிட்ட அவன் தன் வீட்டிற்கு வந்து வழக்கம்
போலபடுத்து தூங்கியுள்ளார்.

 

ஆனால் திடீரென அதிகாலை 3 மணிக்கு சிபிச்சக்கரவர்த்திக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon