--- --:--:-- --

பெற்றோரை காவல் ஆய்வாளர் திட்டியதால் கோபமடைந்த மாணவன் கைகலப்பு! லத்தி அடி வாங்கிய குடும்பம்!

8

கோவையில் பெற்றோரை திட்டியதை எதிர்த்த பத்தாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையில் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வரும் வேல்மயில் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கடந்த 17ஆம் தேதி இரவு சிற்றுண்டி விற்றுக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு ரோந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை மூடும் படி அறிவுறுத்தினார். கடையை மூட மறுத்தவர்கள் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களின் செல்போனை பிடுங்கிய உதவி ஆய்வாளர் கடையை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

 

பெற்றோரை உதவி ஆய்வாளர் திட்டியதை கண்டு அவர்களின் மகனான பத்தாம் வகுப்பு மாணவன் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை எடுத்து தர மறுத்து கைகலப்பில் ஈடுபட்டான். இதைக்கண்டு சாவியைப்பிடுங்கிய காவல்துறையினர் பள்ளி மாணவரை லத்தியால் அடித்துள்ளனர். பின்னர் பள்ளி மாணவனை வாகனத்தில் ஏற்றி ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 

பெற்றோர் மீதுள்ள பாசத்தால் மாணவர் இவ்வாறு நடந்து கொண்டதை அடுத்து உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பெயரில் பள்ளி மாணவன் மீது வழக்குபதிவு செய்யாமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். தடையை மீறி இரவு 8 மணிக்கு மேல் கடை நடத்தியதையடுத்து பொது இடத்தில் இடையூறு செய்ததாக மாணவரின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை விடுவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon