பழக்கடையில் ஜூஸ் குடித்த மாணவி உயிரிழப்பு..!
கோவில்பட்டி அருகே பழக்கடையில் ஜூஸ் குடித்த மாணவி உயிரிழந்த நிலையில் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தேக மரணமாக வழக்கு பதிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கயத்தாறு பாரதி நகரை சேர்ந்த மகாலிங்கம் கடலூர் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி மற்றும் லக்ஷ்மி பிரியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பழக்கடையில் ஜூஸ் வாங்கி வீட்டில் வைத்து சாந்தி மற்றும் மகள் லட்சுமி பிரியா இருவரும் குடித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






