--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள்..!

3

ன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

 

டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதேபோல் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து நாட்டை உயர்வான வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் மோடியின் தேசபக்தியும் முடிவெடுக்கும் திறனும் இந்தியாவை வல்லரசாக மாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon