கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை..!
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் உரையாற்றினார்.
வடகிழக்கு பருவமழையால் பொது மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் நிவாரண மையங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயாராக உள்ளன என்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் பொக்லைன் இயந்திரங்கள், நீர் இறைப்பாண்கள் மூலம் வெளியேற்றப்படுவதாக முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த மக்களுக்கு இதுவரை 16,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழையால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டாலின் ஆலோசித்தார். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நெற்பயிர்களை சுமார் நாற்பதாயிரத்து ஐநூறு விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் தமிழகப் பேரிடர் மீட்பு படையினரை அனுப்பவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.





