மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்..!
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளின் பாடத்திட்டங்களை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன் வந்தால் அதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா உள்துறை அமைச்சர் தலைமையில் நிறுவன தலைவர் சீனிவாசன் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர், தமிழக அமைச்சர், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தணிகை கவனம் செலுத்துவதாகவும் தமிழகத்தின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் வழி கல்வி பாடத்திட்டங்களை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.





