--- --:--:-- --

மருத்துவ நிபுணர் குழுவுடன் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

3

கொரொனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 

தமிழகத்தில் கொரொனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து கடந்த 10ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. காய்கறி மளிகை கடைகள், பார்சல் மட்டும் வழங்கும் வகையில் உணவகங்கள், அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

ஆனால் விதிமுறைகளை மதிக்காமல் பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. ஆனால் இப்போதும் பொதுமக்கள் விதிகளை மீறுவது தொடர்கிறது. தினந்தோறும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

 

சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படும் போது 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இந்த பொது முடக்க நிலை நீடித்தால் மட்டுமே நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு முடக்கத்தை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon