சீருடை அணிந்து இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர்
ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், புதிய பாஸ் அளிக்கப்படும்வரை அரசு நகர பஸ்களில் கடந்தாண்டு பாஸ், பள்ளி அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம், சீருடை அணிந்தும் அரசு நகரப் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம், இந்த அறிவிப்பு, கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார். SHARE IT.





